
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகள் திருமணத்திற்கு ரசிகர்களுக்கு அவர் வைத்த வேண்டுகோள் என்ன தெரியுமா? என்னுடைய இளைய மகள் திருமணத்திற்கு என் ரசிகர்கள் அனைவரையும் அழைக்க எனக்கு மிகவும் ஆசைதான்.எனக்கு ரசிகர்களும் அதிகம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்கவும் ரசிகர்கள் அனைவரையும் திருமணத்திற்கு வரவேண்டாமென்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று பேட்டி கொடுத்துள்ளார். அதே ரஜினி அவருடைய எந்திரன் படத்திற்கு வருகைதரும் ரசிகர்களுக்கு இப்படி சொல்லியிருப்பாரா? அதாவது என்னுடைய எந்திரன் படம் ரிலீசாக இன்னும் குறைவான நாட்களே உள்ளன, அதனால் ரசிகர்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள். என்னவென்றால்,என்னுடைய அனைத்து ரசிகர்களும் என்னுடையஎந்திரன் படம் பார்க்கவேண்டுமென்று எனக்கு மிகவும் ஆசைதான் ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்கவும். ரசிகர்கள் அனைவரையும் என்னுடைய எந்திரன் படத்தைப் பார்க்க வரவேண்டாம் என்று மிகத்தாழ்மையோடு ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். ! இது எப்டி இருக்கு!
.
No comments:
Post a Comment